பக்கம்:பருவ மழை.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆத்திகக் காதல் கொண்டு ஆலயம் பலவும் சென்று தோத்திரம் செய்து வந்தாய்! கொடர்ந்து நீ தொழுது வந்த மூர்த்தியுள் எவரும் உந்தன் முடிவினை மாற்ற வில்லை கேத்திரம் இழந்த வன்போல் நிலைதடு மாறு கின்றேன்! பல்கலைக் கழக வேந்தர் பதிவாளர், அறிஞர், மற்றும் எல்லோரும் உனது ஆத்மா இனிதுகற் சாந்தி காணச் சொல்லாற்றித் தீர்மானத்தைத் தொகுத் தெனக் கனுப்பித் தந்தார் செல்வ; கின் மறைவுக் கென்று விடுமுறைச் சிறப்பும் செய்தார்! தமிழ் கவிஞர் மாமன்றம் தமிழ்த்திற ய்ைவு மன்றம் தமிழரசு அச்சுக் கூடத் தொழிலர் கலக் கல்விக் கூடம் தமியன் கின் மறைவுக்காக இரங்கற் கூட்டங்கள் போட்டு இமயம் போல் சாய்ந்த உன்னை எத்தனை புகழ்ந் திட்டார்கள்! 227

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/239&oldid=807533" இலிருந்து மீள்விக்கப்பட்டது