பக்கம்:பருவ மழை.pdf/240

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கெங்கு சென்றிட்டாலும் இளைஞர்கள் உன் போன்ருரை அங்கங்கே கானுந் தோறும் ஆவியை உலுக்கும் வண்ணம் பொங்கும் என் உணர்ச்சி வேகப் புயலினைக் குமுற லாக்கி அங்கமும் உளமும் சோர்ந்து ஆவியும் தளர்ந்த தப்பா! கவியரங்கங்களில்கான் கலந்திடும் போதிலெல்லாம் அவையுறும் வேளையில்தான் r அவசரக் கவிதை தோன்றும் அவையெலாம் அவ்வப்போது அழகுறப் படியெடுத்துச் சுவையுடன் தொகுத்தளிக்க எவருளார் இனிமேலிங்கே? ஆற்றுவாரில்லை, என்பால் அன்புளார் இல்லை, கெஞ்சைத் தேற்றுவா ரில்லை நேர்ந்த . திவினை விளைத்த துன்பம் மாற்றுவாரில்லை, எந்தன் மாசிலா மனத்தைக் கண்டு போற்றுவாரில்லை உன்போல்; புவியிடை மகிழ்ச்சியில்லை! 228

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/240&oldid=807536" இலிருந்து மீள்விக்கப்பட்டது