பக்கம்:பருவ மழை.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உன்னையின்(று) இழந்தே னென்ற ஒருபெரும் இடியென் னெஞ்சம் தன்னிலே விரைந்து தாக்கித் தகர்த்ததால் பெருகும் ரத்தச் சென்னிரைக் கண்ணி ராகச் சிந்திகின் ஆத்மாவுக்கென் புன்கவி மலர்கள் தூவிப் பூசித்துப் புலம்பு கின்றேன்! பசியினுல் துடிதுடித்துப் பதறிடும் ஏழையின்முன் புசியென அன்னமிட்டுப் புசித்திட முனையும் போது விசையுடன் தட்டி விட்டு வீணுக்கிக் களித்துவக்கும் பசையறு கெஞ்சங் கொண்ட பாவியா இறைவன் என்போன்? விழிகளைக் கொடுத்து இன்ப விந்தைகள் செறியும் ஞால அழகெலாம் சுவைத்து உள்ளம் ஆர்வத்தில் திளைக்கும் போ(து) அவ் விழிகளைப் பறித்துக் கொண்ட வீணன் தான் இறைவன் என்ருல் ஒழியட்டும் அவன் படைத்த உலகமும் அவனும் ஒன்ருய்! கவிஞரின் புதல்வர் திரு அசோகன் பேருந்து விபத்தில் மறைந்தபோது பாடப்பெற்ற துயரக் கவிதைகள். தோற்றம் 15-6-53 மறைவு 21-1.75. 229

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/241&oldid=807537" இலிருந்து மீள்விக்கப்பட்டது