பக்கம்:பருவ மழை.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தடை பலவிதிதிட்டாலும்,தனித்தெவர் தடுத்திட்டாலும் கடமையிற் சிறிதும் மாருக் கண்ணியவானே, காட்டின் அடிமையின் கொடுமைதன்னை அவனியோர்க்(கு) அரங்கம் ஏறித் திடமுடன் உரைக்கும்தீரத் தியாகியும் உன்போல் உண்டோ? முன்னரிவ் வுலகில் மாண்டு முடிந்தவர் பலரேயாவார் என்னிலும், நவரசங்கள் இயங்கிடும் அரங்கில் வேலன் தன்னுரு வோடேயிந்தத் தாரணி வாழ்வை நீத்துப் பொன்னுல கடைந்தவீரப் புனிதன்கின் நாமம் வாழ்க! சென்னை ஒற்றைவாடைக் கலையரங்கில் வேலவன் வேடத்தோடு 31.12-40. விண்ணுலகடைந்த தேச பக்தர் எஸ். எஸ். விஸ்வநாததாஸ் அவர்களின் மறைவுக்காகப் புதுக் கோட்டையில் நிகழ்ந்த இரங்கற் கூட்டத்தில் அச்சிட்டுப் படித்து வழங்கிய இரங்கற்பா. 232

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/244&oldid=807542" இலிருந்து மீள்விக்கப்பட்டது