பக்கம்:பருவ மழை.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னலெல்லாம் இன்பமென ஏற்றுக்கொண்டு இரவு பகல் பாராது ஒய்வேயின்றி தன்னலங்கள் மறந்துதமிழ்ச் சேவைசெய்த தமிழ்ஒளியின் உழைப்பைஉள்ளம் மறந்தாபோகும்: சமுதாயச் சீர்கேட்டைச் சாடுதற்கும் சரித்திரத்தின் பொற்காலம் மீள்வதற்கும் சமயமதப் போராட்டம் ஒய்வதற்கும் சாதிவெறிப் பேயாட்டம் மாய்வதற்கும் தமிழ் இனத்தின் பண்பாடு ஓங்குதற்கும் தலையெடுக்குங் களையனைத்தும் நீங்குதற்கும் சமதருமக் கொள்கைகிலை பெறுவதற்கும் தளராது கவிக்கணையால் சமர்தொடுத்தான்! சிறுவனெனக் காண்போர்கள் நினைத்திட்டாலும் சிறப்பாகக் கவியியற்றுங் கலைக்கைவந்தத் திறமையில்ை பெரியோனுய்த் திகழ்ந்த மேலோன்! சிந்தனையில் முற்போக்கு எண்ணம் கொண்டோன் வறுமையெனுங் கொடுமைகிறை வல்லரக்கன் வயப்பட்டும்; புத்திதடு மாற்றமுற்றும்; கிறைமதியிற் களங்கமெனக் காசநோயால் நிலைகுலைந்தும் மாய்ந்ததுயர் கெஞ்சைக்கவ்வும். ஞாலமிசைத் தமிழாலே ஒளியைப்பெற்று நந்தமிழுக்(கு) ஒளிசேர்க்க இடையருது கோலமிகுங் கவிதை ஒளி பரப்பிவந்த கொற்றமிகுந் 'தமிழ்ஒளி"யாம் இளங்குருத்தைக் காலனெனுங் கொடியதொரு கள்வன்வந்து கவர்ந்திட்டான் எனினும் அவன் கவிதைப் பூக்கள் காலவெப்பிற் கருகிடாது தமிழ்த்தாய் என்னும் கன்னியவள் சன்னதியில் கமழும் பூக்கள்! 234

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/246&oldid=807546" இலிருந்து மீள்விக்கப்பட்டது