பக்கம்:பருவ மழை.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்று காண்போன்? கலைமகளின் தலை மகனே! நாட கத்தாய் கண்டெடுத்த கன்முத்தே கடிக ருக்குள் விலைமதியாக் கற்பகமே! பார தத்தின் விடுதலைக்கும் பங்களித்து உயர்ந்தமேலோய்! பலதுறைக்கும் கலைத்துறையைப் பயன்படுத்திப் பயிற்சி தந்தும், கலைஞர்களை மதித்தும் போற்றுங் கலைமணியே சண்முகமே! உன்னை எந்நாள் காண்பதினி என்றுள்ளங் கலங்கு தையா! எவ்வெவர்பாற் பழகிடினும் அவர்பாற் காட்டும் இனியகட்பில் மயங்கியிரண் டறக்க லந்து ஒவ்வொருவ ருளமும்அவ்வை சண்முகம் தன் ஒருவனுக்கே உண்மை நண்பன் என்று எண்ணும்! செவ்வையுறும் அன்பினுக்குச் சிகர மாய்ை! செந்தமிழர் பண்பினுக்கோர் கிலேய மாய்ை! கவ்வியுந்தன் பொன்னுடலிற் கவிழ்ந்த வெந்தீக் கனலின்வெம்மை தணிவதெந்நாள் தமிழர் நெஞ்சில்! பெருமைகொள்வாய்த்தமிழாரீ'யெனும்என் பாட்டைப் பேசரிய ஒளவையாரின் நாட கத்தில் அருமைமிகுங் காட்சிதனில் அமைத்துக் காட்டி அங்கவையும் சங்கவையும் பாடும் போது பொருள்கயத்தில் மனங்கலந்து மயங்கி நின்று பூரித்துத் தலையசைத்து உணர்ச்சி பொங்கிக் குரலெடுத்துக் குதித்து இசை கூட்டும்போது கொட்டகையே அதிரும்; அதை என்று காண்பேன்! 235

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/247&oldid=807548" இலிருந்து மீள்விக்கப்பட்டது