பக்கம்:பருவ மழை.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறத்தின் செம்மல் வித்தொன்று மரமாகிக் கிளைகள்.பல விரித் தடர்ந்து விழுதிறங்கி எத்திக்கும் நிழல் பரப்பி நாடிவரும் எல்லோர்க்கும் இனிமை நல்கும்! அத்தன்மை போல் அனந்த ராமகிருஷ்ணன் அறப்பணிகள் அனைத்தும் கேட்டென்! சித்தத்திற் களிதுளும்பித் தேசத்தில் தொழில் வளங்கள் சிறக்கக் கண்டேன்; அடிமையிருள் நீங்கியும் நம் சுதந்திரப்பொன் நாட்டினிலே அல்லல் மிக்கக் கொடுமை நிறை வறுமை நிலை அகலாத குறை யகற்றிக் கொற்றம் சேர்க்க கெடிதுயர்ந்த தொழில் வளங்கள் பல பெருக வேண்டு மென நினைவிற்கொண்டு கடிதுபல நிறுவனங்கள் தொழிலாற்றத் திட்ட மிட்ட கனவான் வாழ்க! 236

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/248&oldid=807550" இலிருந்து மீள்விக்கப்பட்டது