பக்கம்:பருவ மழை.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தர்மகர்த்தாப் பொது உடமைத் தத்துவத்தைக் காந்திமகான் தந்தார்! அந்த மர்ம மெல்லாம் எண்ணுமல் உழைப்பவர்கள் வறுமையுற்று வாடல்; அன்னர்"கர்மபலன்'-எனச் சொல்லித் தனித்துறையார் கொள்ளையிடும் கயமை நீக்கி நிர்மலய்ை அனந்தராம கிருஷ்ணன்தொழி லாளருக்கு நீதிசெய்தான்! தென்னகத்தின் தொழில்மேதை என இந்த தேசமக்கள் சிறப்பாய்க் கூறும் மன்னவனும் அனந்தராம கிருஷ்ணனெனும் மாண்புயர்ந்த மாசில்லானின் உன்னதாற் ருெழில் வளர்க்கும் திறமைகண்டு உயர்வடையும் உள்ளம் கொண்டு விண்ணவர்கள் பரிந்துவந்து விரைந்தழைத்துக் கொண்டனரோ விதியின் கூற்றே! ஆழ்வார் குறிச்சிதந்த அனந்த ராமகிருஷ்ண னெனும் அறத்தின் செம்மல்! தாழ்வான நிலைநிலவும் தமிழகத்தில் தொழில் வளங்கள் தழைப்பதற்கு ஊழ்மேவும் வலிமையையும் உடைத்தெறிந்து முன்னேறி உயர்வுபெற்று வாழ்வாங்கு வாழ்ந்து, பல்லோர் வாழ்வதற்கும் வழிவகுத்த வள்ளலன்றே! 237

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/249&oldid=807552" இலிருந்து மீள்விக்கப்பட்டது