பக்கம்:பருவ மழை.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேரன்மேல் பாண்டிமன்னன் சினந்துபோர்ப் படை யெடுப்பான்? போரினில் தோற்றசேரன் பொருதுவான் பின்னேயோர் пѣтбй? காரணமின்றிக் காழ்ப்பால் காவிரி நாடன்; பாண்டி வீரன்மேற் பகைதொடுத்து வெற்றியிற் கொக்கரிப் பான்! சுயநலம் பேணி மன்னர்த் தொடுத்திடும்போரிலெல்லாம் பயனென்றுங் காணமக்கள் பலிக்கடாவாகி மாள்வார்! கயல்புலி மீனைத்தாங்கிக்களத்திடைமாண்டோரெல்லாம் அயலினத் தவர்களல்லர்! அருந்தமிழ் மறவர் கூட்டம்! இருபது நூற்றண்டாக இடைஇடை அடுத்தடுத்துப் பரவலாய் படையெடுத்துப் பரத்துக்கு வழியைக் காட்டும் குருவென்றும் சமயம் காக்கும் குரவர்கள் என்றும் கூறிச் சரசர வென்று வந்தார்! தமிழர்கள் சீரழிந்தார்! பாண்டியர் தாயாதிக்குள் பகைமுள; உதவிகாடி வேண்டியே வடுகவேந்தன் விஜயமா நகரோன் சூழ்ச்சித் துண்டிலிற் சிக்கி ஆட்சித் துறந்தனர் தெலுங்கர் . தம்பால்) "ஈண்டிவண் பாளையத்தார் இவர் வழி வம்சத்தாரே! 244

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/254&oldid=807570" இலிருந்து மீள்விக்கப்பட்டது