பக்கம்:பருவ மழை.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தஞ்சையின் சோழ ராட்சித் தலைமையை மார த்தியர்க்கும் செஞ்சியிற் கோட்டைகட்டும் சிறப்பினை ஜெயசிங் கிற்கும் கஞ்சியைப் பல்லவர்க்கும் காணிக்கை யாக்கி விட்டுத் துஞ்சிய தமிழனுக்குச் சுயமரி யாதை ஏது: தருக்குடன் களப்பிரர்கள் தமிழகம் வந்த போதும் துருக்கர்கள், போர்ச்சுக்கீசன், டச்சுடன். பிரெஞ்சுக் காரன் அரக்கர் போல் ஆங்கிலேயன் ஆட்சியைப் பறித்த போதும் ஒரு கணங் கூட மக்கள் ஒற்றுமை பேணவில்லை! எட்டப்பர், தொண்டைமான்கள் எண்ணிலார்த் துணையிைேடு கட்டினர் அடிமை ஆட்சிக் கற்கோட்டைத் தன்னை யிங்கே பெட்டிப்பாம் பாகிமக்கள் பேசவும் பயந்து, ஆவி விட்டிடத் துணிவுமின்றி கடைப்பிணம் போல் திகைத் தார்! இருநூருண்(டு) அடிமை வாழ்வின் இன்னலை நீக்கு தற்கு ஒரு பெருங் கருணைவள்ளல் உதித்தனர் காந்தி சத்ய விரதம் மேற் கொண்ட அன்னர்விதிவழி ஒற்றுமை தன் அருமையை உணர்ந்தோம்! அன்றே அடிமையின் கொடுமை வென்ருேம்! 245

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/255&oldid=807599" இலிருந்து மீள்விக்கப்பட்டது