பக்கம்:பருவ மழை.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விடுதலை பெற்றமக்கள் வேற்றுமை தொலைந்ததுண்டா? இடர்தரும் சாதிபேத இருட்குவை மறைந்த துண்டா? படர்ந்திடும் ஏற்றத் தாழ்வைப் பகைத்து நாம் அழித்த துண்டா? தொடர்கதை இதுவே என்ருல்; சுதந்திரப் பயன்தான் என்ன? முன்னர் இந் நாட்டில் வாழ்ந்த முடிமன்னர் மக்கள் தம்மை தன்னலம் கருதிப் போரில் தலைகளை மலை போல் கொய் தார்! அன்னவர் போல் தான் இன்றும் அரசியல்தலை வரென் போர் துன்னலர் உயிர் குடித்துத் துய்க்கின்ருர் சுக போகங்கள்! ஒரு பெருங் கொம்பைக் கையால் ஒடித்திடும் வலிமை மிக்கார் சிறுசிறு;கொம்பைக் கூட்டிச் சேர்த்தொன்ருய்க் கட்டித் தந்தால் உரமெலாம் திரட்டிக்கொண்டு ஒடித்திட முயன்றிட் டாலும் அரியதாம் முறித்தலென்று அயர்வதை அறிவோ மன்ருே? 246

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/256&oldid=807628" இலிருந்து மீள்விக்கப்பட்டது