பக்கம்:பருவ மழை.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அண்டத்திற் கப்பாலே சுற்றுதற்கும் அடுத்துள்ள கோள்களினைப் பற்றுதற்கும் கண்டங்கள் அத்தனையும் காண்பதற்கும் கடலெங்கும் கலம்செலுத்தி உலவுதற்கும் எண்டிசையும் நாகரிகம் பரப்புதற்கும் ஏற்றமிகும் விஞ்ஞானம் வளர்ப்பதற்கும் பண்டு தொட்டின் ள்ைவரைக்கும் மனிதன் காணும் பயன்களெல்லாம் துணிபெனும்பாற் பட்டதன்ருே! அடலேறு போல் அடங்காக் காளை தன்னை அடக்கிவெற்றி மாலையிடத் துணிபு தேவை! கடலென்னச் செருக்களத்தில் களிறே யென்னக் கலக்கிவென்று மீண்டுவரத் துணிபு தேவை! மடலேறி உடல்வருத்தி விரும்பும் மாதின் மனம்மாற்றி மணம்புரியத் துணிபு தேவை! படமாடும் மங்கல காண் புனைவதற்குப் பாய்புலியின் பல்லெடுக்கத் துணிபு தேவை! காதலினை வீரத்தைக் கண்களைப் போல் காப்பதுதான் தமிழினத்தின் பண்பு என்னும் போதனையைப் புகட்டுவதே அகம் புறச்சீர்ப் புதுமை நிறை இலக்கியங்கள் சிறப்பாம்!-காதல் சோதனையில் மனம் துவண்டுச் சோர்வுருமல் தூய அன்பால் இணைக்தொழுகும் ஆண்பெண் இல்லக் காதலின்பம் உலகியற்கை அதனைப் பேணிக் காப்பதற்கும் துணிபெனும் அஞ்சாமை தேவை! 16 249

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/259&oldid=807634" இலிருந்து மீள்விக்கப்பட்டது