பக்கம்:பருவ மழை.pdf/262

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பரிதிமால் கலைஞர் பயிர்களிடைப் பரவிநிற்கும் களைகளைப்போல் பைந்தமிழில் பிறமொழியின் ஆதிக்கத்தைத் தயிருடைக்கும் மத்தெனவே தகர்த்தெதிர்த்துத் தன்பெயரைத் தூயதமிழ்ப் பெயராய்மாற்றி உயிரியக்கம் தமிழகத்தில் தோன்றச்செய்து ஒப்பரிய இலக்கணம் நாடகத்துக் கீய்ந்த செயற்கரிய ரெனும்பரிதி மால்கலைஞர் சேவடிக்கும் என்.வணக்கம் செலுத்துகின்றேன்! சி. கன்னையா வண்ண வண்ண ஆடையணி மணிகள் பூட்டி வடிவழகாய் இரதங்கள், தேர் அமைத்துக்காட்டி கண்களுக்கும் கருத்துக்கும் மகிழ்ச்சியூட்டிக் காட்சிகளில் மிகச்சிறப்பாய் எழிலைக்கூட்டி பண்சுவைக்குக் கிட்டப்பா இசையைமீட்டிப் பக்திக்குப் பற்பலவாம் கதைகள்காட்டிக் கன்னையா ஆடரங்கிற் புரட்சிகண்ட கதையெல்லாம் கனவாகிப் போனதன்றே: 252

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/262&oldid=807641" இலிருந்து மீள்விக்கப்பட்டது