பக்கம்:பருவ மழை.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாாடியாளக்கும் மராமன்! பொங்கல் தழிழர்விழா புனிதவி ழாவிதனில் உங்களைக் காண்பதிலே உவகை பெருமகிழ்ச்சி மாசிலாஉழவர்களை மதித்து விழா வெடுக்கும் தேசீய இளைஞர்பே ரவையினர்க்கு என் வணக்கம்! உழவன் பெருந்தொண்டுக் கொப்பில்லை யென்றோம் பழமை இலக்கியங்கள் பறை சாற்றும் பார்த்திருப்பீர்! "உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்; மற்றவரெல்லாம் தொழுதுண்டு பின் செல்வார்' என்றே வள்ளுவன் சொன்னன்' "உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் விளிைல் உண்டு கொழுத் திருப்போரை கிந்தனை செய்வோம்' என்று ஏருழுவோன் சிறப்பெல்லாம் எடுத்திந்தப் பாரோர்க்குப் பாரதியும், வேறு பல பாவலரும் சொன்னர்கள்! இன்றைக்கு உழவனிடம் ஏது.ஒரு காணிநிலம்! என்றைக்கோ எப்படியோ ஏமாற்றிப் பறித்துவிட்டோம்! திண்டாதார் என்று சொல்லிச் சிலரை ஒதுக்கி விட்டோம்! வேண்டாத உழவர்களை விரட்டி அடித்து விட்டோம்! ஆலுைம் அவனின்றி அவனி இயங்கிடுமோ? 255

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/265&oldid=807647" இலிருந்து மீள்விக்கப்பட்டது