பக்கம்:பருவ மழை.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாணுளெல்லாம் அவனை வதைத்துப் பிழிகின்ருேம் பண்ணையாள் என்றும் பள்ளனென்றும் பறைய னென்றும் மண்ணின் புதல்வர்களை வாட்டி வதைக்கின்ருேம்! "அவனின்றி ஓரணுவும் அசையாது என்னும் உண்மை அவனுக்கே புரியாமல் அடிமைபோல் உழைக்கின்றன்! உண்மை உணர்ந்து அவன் உழைக்க மறுத்து விட்டால், எண்ணம் சொல் செயல்யாவும் இருள் சூழ்ந்து மாய்ந்து விடும்! மேட்டுக் குடியினர்க்கும் மேன மினுக்கிகட்கும் சூட்டும் கோட்டும் போட்டு சொகுசாக வாழ்வோர்க்கும் குளிர்சா தனவரையில் குமரிகளைக் கூடிநித்தம் களியாட்டம் போடுகின்ற கருப்புமுதலை கட்கும் பண்டங்கள் அத்தனையும் பதுக்கிப் பணம் குவிக்கும் சண்டாளர் கட்கும், சமூக விரோதி கட்கும் கள்ளக்கடத்தல் செய்யும் கயவர் கட்கும், அன்னவர்க்கு உள்ளாளாய்த் திரை மறைவில் உதவும் அதிகாரி கடகும சத்யவான் போல் முழங்கிச் சண்டப்ர சண்டமிட்டுப் பித்தலாட்டம் புரியும் பிற்போக்குவாதி கட்கும் காஷாயம் விபூதிக் கழுத்தில் உருத்திராகூடி வேஷமிடும் போலி வீணர்கட்கும், மற்றுமிங்கே குண்டர்களாய்ப் போக்கிலியாய்க் கொலைபாத கம்புரிந்துச் தெண்டச்சோ றுண்ணும் தெருப்பொருக்கி காய்களுக்கும் 256

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/266&oldid=807649" இலிருந்து மீள்விக்கப்பட்டது