பக்கம்:பருவ மழை.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் உலகிலுள்ள ஏனையோர் யாவருக்கும் உண்ணும் உணவளித்து உயிர்வாழத் துணைபுரிவோன் ஏழை உழவனன்ருே இன்றவன்தன் இழி நிலைக்குப் பாழும் சமுதாயம் பழியேற்க வேண்டு மன்ருே? பாருக்குப்படி யளக்கும் பரமன் அவன் தானே! ஊருக்குச் சோறளிப்போன் உணவுக்கு ஏங்குவதா? பட்டணத்துச் சீமான்கள் பகட்டான வாழ்வுக்குப் பட்டி தொட்டி மக்கள்படும் பாடன்ருே மூலதனம்! "சுழன்றும் ஏர்பின்னதிந்த உலகென்று வள்ளுவனர் முழங்கும் அறிவுரைகள் முற்றும் மறந்து விட்டோம்! உழுவோர்க்கே நிலமென்று உரைத்திட்ட காந்தி ΙΙ. Ι6ύδΠΥ(όδΤ6λ) விழுமிய சொல் இன்றைக்கு விழலுக்கு நீராச்சு: நிலச்சீர் திருத்தமென்று நிகழ்ந்த வொரு நாடகத்தால் பலன்பெற்ருேன் உழவனல்ல, பழைய நில முதலைகளே! தங்கள் தங்கள் குடும்பத்துள் தலைதலையாய்க் கணக்கெடுத்து பங்கு வைத்துக் கொண்டதன்றிப் பயன் உழவர்க் கேதும்.உண்டா? அறுபதென்றும் காற்பதென்றும் அரசாங்கம் சட்டமிட்டப் பெரும்பயனை உழுதிடுவோன் பெறுவதற்கு வழியில்லை! உடமை படைத்தோர்க்கும் உழுது விளைப்போர்க்கும் இடையே தரகர்களாய் இருப்போரே குத்தகைதார்! வெட்டிக் களைக்காமல் விதைத்து அறுக்காமல் குட்டி ஜமீன்போல் இடையில் கொழுப்பவரே குத்தகைதார்! 257

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/267&oldid=807650" இலிருந்து மீள்விக்கப்பட்டது