பக்கம்:பருவ மழை.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நித்தம் நித்தம் வேர்வை நீர்சிந்தும் உழவனுக்கு அத்தக்கூலியன்றியிங்கே அனுவளவும் லாபமில்லை! உழைத்தால் தான்கூலி, ஒருவேளை, அரைவயிறு \ உழைப்பதற்கும் வழியில்லை, ஊரெங்கும் வறண்டநிலை இன்றுதான் இந்தநிலை; இதற்குமுன்னே தமிழகத்தில் குன்றுபோல் தானியங்கள் குவிந்துவிட்டதென்ருர்கள்! பசுமைப் புரட்சிசெய்து பாழ்நிலத்தை விளையவைத்து வசியும் வளம்பெருக்கி வளர்ந்து விட்டோ மென்ருர்கள்! அன்று குவித்துவைத்த அரிசிமுதல் தானியங்கள் சென்று மறைந்த விதம் செப்படி வித்தை யன்ருே? மஞ்சள் கயிற்ருேடு மனைவிளக்காய் வாழவந்த பொஞ்சாதியின் வறுமைப் புலம்பலைத்தான் - காணுகின்ருேம்! கொஞ்சித் தினம் மகிழ்ந்து குடும்பம் விளங்க வந்த பிஞ்சிக் குழந்தைகளின் பெரும்பசியைக் காணுகின்ருேம்! பஞ்சப் பகுதிகளில் பசிக்கொடுமையால் உடலில் மிஞ்சி நிற்கும் உயிர்மூச்சும் மெலிவதைத்தான் காணுகின்ருேம்! இப்படியே காட்டின் நிலை இருந்தால் எரிமலை போல் கொப்பளிக்கும் ஓர் புரட்சிக் குமுறி வெடித்து விடும்! ஒட்டுக்கள் தந்த மக்கள் உணர்ச்சித்தீ:பெருகிவிட்டால் வேட்டுத்தான் காட்டின் விடிவுக்கு வழிவகுக்கும்! ஏழைக் கவிஞன்தான்; என்ருலும், மற்றவர்போல் கோழைக்கவிஞனல்ல; குமுறும் எரிமலை கான்! எச்சரிக்கை செய்கின்றேன், இனியேனும் அரசியலில் பச்சைத் துரோகிகளைப் பாராட்டி வளர்க்காதீர்! 258

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/268&oldid=807668" இலிருந்து மீள்விக்கப்பட்டது