பக்கம்:பருவ மழை.pdf/279

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவாலயம் நூலகம்


இராகம்-பந்துவராளி தாளம்-ஆதி அறிவாலயம் நூலகம்-அதன் அனுபவங்கள் தரும் பயன்கள் அநேகம்- (அறி) திறமையும் இலக்கியத் தெளிவையும் அளிக்கும் சிந்தனை வளங்களைச் சந்ததமும் வளர்க்கும்- (அறி) மனிதனைப் புனிதனுய் மாற்றும்-கெட்ட மனத்தின் இருள்நீக்கி மாண்பை உண்டாக்கும் தனிமையிலும் இனிமை சேர்க்கும்-வரும் சஞ்சலங்கள் எல்லாம் பஞ்செனப் போக்கும்- (அறி) வித்தகக்கலை ஞானம் விஞ்ஞானம் தத்துவம் விண்ணியல் மண்ணியல் நுண்ணிய பொருளியல் புத்தறிவெல்லாம் புத்தங்கள் வழங்கும் புதியதோர் சமுதாயம் படைத்திடவும் துலங்கும் (அறி) நவரசக் கலைகளை விளக்கும்-கல்ல நாடகம் காவியம் கவிதைகள் கொடுக்கும்...அதன் சுவையில் இல்லா இன்பம் வேறெங்கே இருக்கும்? சொர்க்க போகம் இதற்குமேல் எங்கேகிடைக்கும்(அறி) (6-4-11- "செங்கோல்") 269

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/279&oldid=807691" இலிருந்து மீள்விக்கப்பட்டது