பக்கம்:பருவ மழை.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழர் நாரு SMMSMMM MMSMSMMSMMSMSMMMS MSMSM SMS SASAAAAAS AAASASASMMMS SMSMSSSSSSS S S S S S S வேங்கடம் வடக்கும் தெற்கே விளங்கிடும் குமரிக்கோடும் ஓங்கிய ஒலி முழக்கும் உயர்கடல் கிழக்கும் மேற்கும் ஈங்கிதற் கிடையே எங்கும் எண்ணிலா நதிகள் பாய்ந்துத் தீங்கனி செந்நெல் சேர்க்கும் சிறப்புயர்த் தமிழர்நாடு! புள்ளினங் கனியையுண்டு மழலையிற் பாடும் இன்பக் கள்ளவிழ் மலர்த்தேனுண்டு வண்டினம் பாடும் ஆற்று வெள்ளத்தில் தவளை தாவும் தென்றலும்பாடும் . கேட்டுப் புள்ளிமா மயில்களாடிப் பூரிக்குக் தமிழர்நாடு வள்ளுவன் மறையும்கம்பன் வழங்கியகவிப் பெருக்கும் தெள்ள மு தென.இளங்கோ செப்பிய சிலம்பும் ஒளவை உள்ளம்இன் னுவகையூட்டும் உயர்தமிழ்ப் பாவும் - மற்றும் வெள்ளம்போல் நிறைந்ததெங்கள் வெற்றிசேர் தமிழர்காடு! ஓவியக் கலைகளோடு ஒப்பரும் சிற்பம் பன்னூற் காவியம் கவிதைச்செல்வம் கணக்கிலா நடனம் கூத்து மேவிடும் நாடகங்கள் மேன்மைசேர் இசைக்கலைகள் யாவினும் சிறந்ததெங்கள் அன்புசேர் தமிழர்நாடு! 1 :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/28&oldid=807693" இலிருந்து மீள்விக்கப்பட்டது