பக்கம்:பருவ மழை.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாழியைச் சுமக்காதிர் ! م------------- .v-میم سپہ مسمی صیامی سميہ:مہ

  • ...,

ராகம்-சிமேந்திரமத்திமம் தாளம்-ஆதி விழியைப் பறித்தாலும் பொறுப்போம்-தமிழ் மொழியைச் சிதைத்திடும் எவரையும் எதிர்ப்போம் (விழியை) பழியைச் சுமக்காதீர் பகையை வளர்க்காதீர் பைந்தமிழ்த்தாய் மொழிக்குப் பங்கம் விளக்காதீர் (விழியை) குயிலுடன் கோட்டானைக் கூட்டி வைப்பதைப் போலே குமரியைக் கிழவன் மணம் முடிப்பதைப் போலே வயிரத்தைப் பித்தளையில் வைத்திழைப்பதைப் போலே வண்டமிழ் உயிர்வாழ வடமொழி உடல் என்ருல் (விழியை) (தமிழுக்கு தேவநாகரிலிபியை உபயோகிக்க வேண்டும் என்ற சர்ச்சை எழுந்தபோது அதை எதிர்த்து எழுதியது.) (30–8–61) 270

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/280&oldid=807695" இலிருந்து மீள்விக்கப்பட்டது