பக்கம்:பருவ மழை.pdf/283

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணில்லாத தேசபக்தர் இன்னல் கோடி கோடியாய் ஏற்றதால் விளைந்த திந்த ஈடில்லாச் சுதந்திரம் கண்ணினும் நம் உயிரினும் சிறந்த தாம் இச்சுதந்திரம் தன்னைக் காக்க உறுதி கொண்டு சமர்புரிந்து வெல்லுவோம் -(சீனனை) பிறந்த காட்டின் சுதந்திரத்தைப் பேணிக் காக்க மறப்பதோ பெருமை மிக்க பாரதத்தின் பெற்றியைக் குலைப்பதோ கிரந்தரம் சுதந்திரம் கிலைக்க வாகை சூடுவோம் நீதிக்காகப் போர்க்களத்தில் வீரசொர்க்கம் நாடுவோம் -(சீன ಶಿಕT) உலகமக்கள் அமைதி காண உறுதி கொண்டுழைத்திடும் உத்தமச் சமத்துவத்தின் தத்துவம் சொல் வித்தகன்-கம் தலைவன் வீரஜவஹர் ஆணை தலையின் மீது கொள்ளுவோம் தர்மயுத்தப் படையில் சேர்ந்து பகையை வீழ்த்திவெல்லுவோம் (சீனனை) (22-11-62, சீனப் படையெடுப்பின்போது எழுதி "செங்கோல்” வார ஏட்டில் வெளி வந்தது.) 273

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/283&oldid=807703" இலிருந்து மீள்விக்கப்பட்டது