பக்கம்:பருவ மழை.pdf/284

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மிகுபொருள் விரும்பாமை SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS உலகின் முதன் மொழியென் றறிஞர் போற்றும் ஒப்பரிய தமிழ்த்தாயின் திருவடிக்கும் தலைமைப் பணிபூணும் கவியரங்கத் தாய்க்குலத்தின் தகைமைக்கும்; என்னேடிங்கே புலமைத் திறம்காட்டிக் கவிதை மாரிப் பொழியுங் கவிஞர் கட்கும்; வானெலிக்கும் நிலையத்தோர் அனைவருக்கும், செவிமடுக்கும் கேயர் கட்கும் நன்றிசொல்லி வணங்குகின்றேன்! ஒழுக்கம்தான் ஜைனத்தின் உயர்ந்த நீதி உயிர்களுக்கு அன்புசெய்தல் அவர்தம் பாதை' இழுக்காகும் மிகுபொருளைச் சேர்த்து வைத்தல் எஞ்சியகைப் பொருளையெல்லாம் எளியோர்க் கீதல்! வழுக்கின்றி வாழ்வதுதான் வாழ்க்கை; என்று மக்களுக்குப் போதனைசெய்து உயர்ந்த ஞானச் செழிப்புற்ற மனம்படைத்த தேவ தேவன் சேவடியைச் சிந்தித்துப் புனித ராவோம்! ஆதிபக வன்முதலாய் இடையீறின்றி அடுத்தடுத்தின் ட்ைடினிலே அவதரித்த போதிமரப் புத்தபிரான் தொடங்கி, ஈண்டுப் புனிதமிகுங் காந்திமகான் வரையில் இந்த மேதினியின் மக்களுக்கு எடுத்தெடுத்து மிகுபொருள்கள் விரும்பிடுதல் அநீதியென்று ஒதியசொல் யார்செவியில் ஏறிற்றந்த உயர்நெறியைக் கடைப்பிடிப்போர் எத்தனைபேர்: 274

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/284&oldid=807704" இலிருந்து மீள்விக்கப்பட்டது