பக்கம்:பருவ மழை.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ராகம்-மணிரங்கு தாளம்-கண்டஏகம் தமிழுக்குப் பகைவன் என்பகைவன்-அவன்என் தம்பியே ஆலுைம் துரோகத்தைச் சகியேன்.--(த) அமுதொத்த தமிழ்மொழி தன்னவெறுத்து-வேறு அன்னியர் மொழிகளில் ஆர்வம் மிகுத்து சமயத்திற் கேற்றபடி தன்மானம் விடுத்து தன்னலம் பேணுவோன் தமிழன: தூ-தூ-(த) அறிவுக்கு ஆங்கிலம் தான்முதன் மொழியா-நேற்று அம்புலியை வென்றவன் தாய்மொழி ரஷ்யா பிறவிக்கு ஒவ்வாத மொழிக்கொள்கை சரியா பிற்போக்குக் கும்பலின் அரசியல் சதியா-(த) தாய்மொழிக் கல்வியே அறிவை வளர்க்கும் தாழ்ந்தோர் உயர்ந்திட வழிகள் வகுக்கும் தூய்மைசேர் இனமானப் பண்பாடு சேர்க்கும் துணிவோடு அரசியல் தெளிவும் உண்டாக்கும்-(த) அன்ஆனதந்தை மனைவி மக்கள் எல்லோரும் அன்னம் அன்னம் என்று அலறித் துடிக்க கர்ணனென்று ஊரார்கள் மதிக்கவே கடிக்கும் கயவஐனப்போல் வேற்று மொழியை மதிக்கும்-(த) அறிவை வளர்க்கும்மொழி ஆங்கிலம் ஒன்றே என்னும் அநியாயப் பொய்மையை அகற்றுவோம் இன்றே வறுமைப் பசிப்பிணி அறியாமை நீங்க வண்டமிழ்த் தாய்மொழி எங்கனும் ஓங்க- (த) 278

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/288&oldid=807708" இலிருந்து மீள்விக்கப்பட்டது