பக்கம்:பருவ மழை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தெள்ளமுதென இனிக்கும் செந்தமிழ் மொழியில்மாந்தர் உள்ளத்தை உருக்கும் பன்னூல்-உயிர்த்திடும் புலவர்க்(கு) அள்ளி அள்ளியிங் களித்துமக்கள் அறிவினை வளர்த்து வந்த வள்ளல்கள் வாழ்ந்த தெங்கள் வண்மைசேர்த் தமிழர் நாடு நிந்தனை புரிவோரேனும் கெஞ்சில்அன்பில் லாரேனும் எந்த நாட்டினரேயேனும் ஏதிலாரேனும் தேடி வந்தவர்க் கமுதளித்து வரும்விருந்தினை விரும்பும் சிந்தனையுடையதெங்கள் செம்மைசேர்த் தமிழர்நாடு வீரத்தால் விரிந்த மார்பும் வெற்றியால் திளைத்த தோளும் திரத்தால் நிமிர்ந்த நோக்கும் செய்கையால் உயர்ந்த போக்கும் ஈரத்தால் பிறருக்குற்ற இடர்நீக்கும் அறப் போருக்கும் நேரத்தை யெல்லாம் போக்கும் நேர்மைசேர் தமிழர்நாடு அன்பினுக் காகத்தங்கள் ஆருயிர்தனையும் ஈந்து துன்பத்தைத் துரும்பாய் எண்ணித் தொல்லைகள் பலவும் ஏற்றுப் பொன்பொருள் அனைத்தும் தந்துபூரித்து அதல்ை எய்தும் இன்பத்தில் மகிழ்ச்சிகானும் இணையிலாத் தமிழர்நாடு 12.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/29&oldid=807711" இலிருந்து மீள்விக்கப்பட்டது