பக்கம்:பருவ மழை.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காலமுதல் அன்றுமாலவரைகின்று கழனி உழுது வரப்பெடுத்துப் பயிர் வேலைகள் செய்துங்களைப் படையா அந்த வீரவேளாளர் தோள்வன்மை யிலும் நல்ல வாலைப்பருவ மடமயிலார் துள்ளும் மானினம்போல் களைகொய் திடுங்கால் மலர்ச் சோலைக்குயிலின் குரலினிலே பாடும் சுந்தரப் பாட்டிலும் சொக்கிவிட்டேன்! சித்தம்களித்தோர் புறம்மயில்கள் தங்கச் சிறகைவிரித்து நடனமிட கித்தம் நித்தம் தெவிட்டாமழலையிலே புட்கள் நெஞ்சம் கவர்ந்திடும்பண் இசைக்க எங்கும் புத்தம்புதிய மலர்மணத்தால் ஒரு புத்துணர்வுற்ற துயிர் குலங்கள் இங்கு இத்தனை இன்பம் இயற்றிமறை கின்ற இரவியின் எற்றத்தைப் போற்றிகின்றேன்! தேவி 1-5-44 280

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/290&oldid=807712" இலிருந்து மீள்விக்கப்பட்டது