பக்கம்:பருவ மழை.pdf/294

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணமகளுக்கு வாழ்த்து, இல்வாழ்க்கை என்னுமெழில் இன்பப் பொழிலிடையே செல்லும் வழிநடைக்குச் சிறந்த துணைவனை நீ தேர்ந்தெடுத்தாய் வாழ்விலுயர் சிறப்பெல்லாம் இன்றுமுதல் நேர்ந்துவிட்டதென்றே உன் நெஞ்டல் உறுதிகொண்டு காதல் கிலேயமெனும் கணவன் மணமறிந்து ஆதரவு காட்டுமுயர் அன்பின் திருவுருவாய்க் கோதில் குணக் கொழுந்தாய்க் குன்ரு மனைவிளக்காய் மாதில் உயர்ந்தவளாய் மாசில்லாக் கற்பினளாய் ஆசைக் கொருநிலையாய் அமுதத் தமிழினிலே பேசும் பொற்சித்திரமாய்ப் பிணிநீக்கும் நன்மருந்தாய்க் கண்ணை இமை காப்பதுபோல் காக்கும் மணவாளன் எண்ணுகின்ற எண்ணமெல்லாம் ஈடேற்றி 606).J. JLJosé'ssssssவாய்மை அருளுடமை வரும் நீதி சொல்வன்மைத் தாய்மை உளங்கொண்டு இல்லத்தலைவர்க் குபசரித்தல் வறியோர் நிலைக்கிரங்கி வரும் நல் விருந்தோம்பிப் பெரியோர்கள் வாழ்த்த உயர்ப் பெண்மை அறம் பேணி வீரத்தமிழ் மரபு விளங்கத் தமிழ்க் கலைகள் தேரத் தெளிந்த மதிச் சீருயரும் மக்களெல்லாம் பெற்றுப் பெரும் மகிழ்வு பெற்றுப் பெரு வாழ்வும் பெற்றுப் பெருமை யெலாம் பெற்றினிது வாழியவே! 284

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/294&oldid=807716" இலிருந்து மீள்விக்கப்பட்டது