பக்கம்:பருவ மழை.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணமகனுக்கு வாழ்த்து வரும் நாளின் இன்பமெல்லாம் வளர்க்கும் திருமணமே திருநாள் உன் வாழ்விலுயர் சிறப்பெல்லாம் நல்கிடும் நாள் இன்று தொட்டே உன் வாழ்வில் இன்பகறுக் தேன் துளிர்க்க நன்று செய்யும் பெண்மயிலை நடைபயிலும் பேடனத்தை வாழ்வின் ஒளிச்சுடரை வரையாத ஒவியத்தைத் தாழ்வில்லா வான்மதியைத் தையலரின் நாயகியை அன்பின் திருவுருவை அன்னை அருள் இனத்தை இன்ப ஒளி வீசுமிரு எழிலார்க் கயல் விழியைக் காதற் கனிரசத்தைக் கருணைத் திருமறைகள் போதிக்கும் பெண்மையெனும் பொறுமைக் கிருப்பிடத்தைத் திரும்பிப்பார் எங்கு மின்பச் செந்தேன் பெருக்கெடுத்து அரும்பி வழிந்தோடுவதை அகக்கண்ணுல் கண்டிடுவாய்! பெண்ணுலகு முன்னேற்றம் பெறும் நாளே இவ்வுலகோர் எண்ணமெல்லாம் ஈடேறும் இன்பப்பெரு நாளாம் ஆதலினுற் பெண்குலத்தின் அடிமைத் தளையகற்றத் தீதாக நிற்பவரைத் தீயிக் கிரையாக்கித் தமிழ்த் தாயைப் போற்றித் தமிழ்க்கலையைக் காத்து இன்பச் தமிழில் உயர்க் கவிதைத் தருவோர்தமை மதித்து வருங்கால வண்டமிழர் வாழ்க்கை வளமடையப் பெருஞ் சேவை செய்து இன்பப் பேறெல்லாம் பெற்றிடுக! 285

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/295&oldid=807717" இலிருந்து மீள்விக்கப்பட்டது