பக்கம்:பருவ மழை.pdf/299

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வெற்றிக் கொடியை நாட்டுவோம் திருத்தணிகை மீண்டதென்று முரசு கொட்டுவோம் -இனி திருப்பதியை மீட்பதற்குக் கச்சை கட்டுவோம் (திருத்) சரித்திரத்தின் குறிப்பையெல்லால் எடுத்துக்காட்டு வோம் .நம்மைச் சாடவரும் எதிர்ப்பை ஒடஓட விரட்டுவோம் -(திருத்) குமரிஎல்லை மீண்டதைக் கொண்டாடிப் பாடுவோம் - அதில் குறைந்து போன பகுதி.மீளத் திட்டம் தீட்டுவோம். அமையும் தேவிகுளமும் பீருமேடும் செங்கோட்டைக் . - காடும் அழகு மலையும்வென்று வெற்றிக் கொடியை நாட்டு . வோம் - (திருத்) தமிழகத்தைச் தமிழில் ஆளச் சட்டமும் செய்தோம் - - என்றும் தமிழினத்தைத் தமிழன் ஆளத் திட்டமும்செய்வோம் தமிழில் உலகக் கலைகள் யாவும் கற்றிடச் செய்வோம் - நீதிச் சட்ட மன்றம் யாவும் தமிழில் நடைபெறச் செய்வோம் - (திருத்) f 289

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/299&oldid=807721" இலிருந்து மீள்விக்கப்பட்டது