பக்கம்:பருவ மழை.pdf/301

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாாாரதியின் கனவு ாாலித்ததா? (ஆடுவோமே பள்ளுப்பாடுவோமே என்ற மெட்டு) ஆடலாமா பள்ளுப் பாடலாமா ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று (ஆடலாமா) எல்லோரும் ஒன்றென்னும் காலம் வந்ததா-பொய்யும் ஏமாற்றும் தொலைந்த தென்னும் காலம் வந்ததா இங்கு கல்லோர் பெரியோரென்னும் காலம் வந்ததா-கெட்ட கயவஞ்சகக் காரருக்கு காசம் வந்ததா -(ஆடலாமா) உழவுக்கும் தொழிலுக்கும் பெருமையுண்டா-வீணில் உண்டுகளித் திருப்போர்க்குச் சிறுமையுண்டா விழலுக்கு நீர்ப் பாய்ச்சி மாயவில்லையா-வெறும் வீணருக்கு உழைத்துடலும் ஓயவில்லையா-(ஆடலாமா) ஏழைகளின் வாழ்வினிலே இன்பம் வந்ததா-அரசியல் எத்தர்கனின் பித்தலாட்டத் துன்பம் தீர்ந்ததா வாழவழி காட்டுவோரைக் காணவில்லையே-சாதி வர்க்கமதபேதம் இன்னும் மாறவில்லையே (ஆடலாமா) ஆங்கில அடிமை மோகம் அகலவில்லையேஅன்னைமொழி பயிற்சிமொழி யாகவில்லையே தீங்கு செய்யும் தெய்வகிந்தைத் திருந்தவில்லையே - idéâ656. T சிந்தனையில் தேசபக்தி சிறிதுமில்லையே-காம் (ஆடலாமா) 291

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/301&oldid=807725" இலிருந்து மீள்விக்கப்பட்டது