பக்கம்:பருவ மழை.pdf/302

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழினத்தின் விருதலே! இராகம்-மாண்டு திவிர ஏகம் விடுதலை-இன்றே விடுதலை-என்றே விண்ணை யெட்டக் கன்னலொத்தப் பண் முழக்கி ஆடுவோம் -(விடுதலை) வேந்தராட்சி மறைந்தது மொழி வெறியராட்சி தொலைந்தது-இன்று மாந்தர்பேசும் மொழியில் ஆட்சி மலர்ந்தது-இன்றே- (விடுதலை) தலைநகர் தனக்காத்தோம் தமிழ்க்குமரி எல்லையை மீட்டோம்-வட மலையைச்சார்ந்த நிலமும் மீண்டு வரும்வரை ஓய - மாட்டோம் கலையரசி தமிழன்னையை அரியாசனம் சேர்த்தோம் கடமை செய்துவெற்றிகண்ட களிப்புடன் முரசார்த் (குந்தளவராளி) திடுவோம்-(விடுதலை) சாதிசமய பேதமற்ற தமிழகத்தைக் காணுவோம் சகலரும் சமநிலைபெறும் புது சபதமின்று பூணுவோம் நீதிமன்றம் அரசியல் பொது நிலையமெங்கும் செந்தமிழ் நிலை உயர்ந்து கலைமணம் கமழ்கவென்று பாடுவோம்(சிவரஞ்சனி) -(விடுதலை) எல்லைச்சண்டை தொல்லைதீர்ந்துஇனவழி சுய அரசுகள் ஏற்றம்கண்டு ஆற்றல் கொண்டு இணையும் இந்திய - - ஆட்சியின் வல்லமை சேர் சக்தியினல் வஞ்சம் சூழ்ச்சிப் போர்வெறி வளர்வதைத் தடுத்து வையம் வாழ்ந்திட வழிகாட்டு - வோம்-(விடுதலை) 393

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/302&oldid=807726" இலிருந்து மீள்விக்கப்பட்டது