பக்கம்:பருவ மழை.pdf/309

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாதருக்குள் மாமணி கம் இந்திரா மாசிலாக் குலக்கொடி நம் இந்திரா நீதியை நிலைநிறுத்தும் இந்திரா-அன்பும் நேர்மையும் நிலைத்து வாழ்க வாழ்கவே- (இந்தியா) கள்ளச் சந்தைக் கொள்ளையை அடக்கவும்-நாளும் கடத்தல் செய்யும் கயவர்தம்மை:மடக்கவும் உள்ளத்தில் நல் உறுதிகொண்ட இந்திரா-ஈன உலுத்தர்கள் எதிர்ப்பை வீழ்த்தி வாழ்கவே-(இந்தியா) சதிபுரிந்து இந்திராவின் ஆட்சியைத் தகர்க்க எண்ணும் கொடியவர்தம் சூழ்ச்சியைப் புதியதோர் எழுச்சிகொண்டு வீழ்த்தியே புனிதவெற்றி கண்டு வாழ்க வாழ்கவே- (இந்தியா) ஆசியாவின் ஜோதிபெற்ற இந்திரா அகில ஜோதியாய் விள்ங்கும் இந்திரா மாசிலா மணம் படைத்த இந்திரா-நாட்டின் மானம் காத்த வீர சக்தி வாழ்கவே- (இந்தியா) 26-12-71 செங்கோல் வார ஏட்டில் வெளியான பாடல். 300

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/309&oldid=807733" இலிருந்து மீள்விக்கப்பட்டது