பக்கம்:பருவ மழை.pdf/312

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆறுவய திற்தொடங்கி யறுபதாட்டைக்(கு) அப்பாலு மாடரங்கிற் றளர்ச்சியின்றி ஏறுகடை இளைஞன்முதற்:கிழவியவ்வை எத்தனையோ குணச்சித்ரப் பாத்திரங்கள் வேறுபல பலவேற்று கவரசத்தேன் விருந்தளிக்குங் கலைமன்னன் சண்முகத்தை நூறுவய துக் கதிகம் வாழ்ந்தின்னுட்டின் நுண்கலைக்குத் தொண்டுசெய்ய வாழ்த்து கின்றேன்! அறிஞர்பெரு மக்களுடன் அளவளாவி அறிவுரைகள் விமர்சனங்க ளனைத்துமேற்றுக் குறையகன்ற தேசீய வரலாற் றுண்மைக் கொற்றமிகு நாடகங்கள் சீர்திருத்த மறுமலர்ச்சிப் புரட்சிமிகு நவீனம் மற்றும் மாசில்லா இதிகாசக் கற்பனைகள் துறையனைத்தும் மேடையேற்றி வெற்றிகண்ட துயதிரு சண்முகமென் னேயன்வாழ்க! முத்தமிழ்நுண் கலாவித்வ ரத்னமென்றும் முன்னேற்றக் கருத்துமிகுஞ் சுத்தனென்றும் பத்திரிகை யனைத்திலும்பா ராட்டப் பெற்ருேன்! பாமரரும் பண்டிதரும் போற்றுங்கற்ருேன்! "பத்மபூரீ' யென்னுமுயர் மதிப்புமிக்கப் பாரதத்தின் தேசீய விருதுபெற்றேன் தித்திக்குந் தமிழ்ப்பாட்டி ஒளவைதன்பேர் சிறந்தோங்க நடித்திடுஞ்சண் முகம்சீர் வாழ்க! 303

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/312&oldid=807737" இலிருந்து மீள்விக்கப்பட்டது