பக்கம்:பருவ மழை.pdf/315

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ாால்லாண்ாரு வாழ்க! உலகெங்கும் செங்கோலைக் கைப்பிடித்து ஊராளும் மன்னர்களாய் வாழ்ந்தோர்-தங்கள் கலமொன்றே குறிக்கோளாய்க் கொண்டு மாற்ருர் நாட்டின்மேல் படையெடுத்து மக்கள் தம்மை கொலைசெய்து குவித்திட்ட கொடுமையன்றிக் கொள்கைக்கும் இனத்திற்கும் மொழிதனக்கும் கலைவளர்க்கும் கருவியெனச் செங்கோல்தன்னைக் கைக்கொண்டோர் சிவஞானம் தனைப்போல் யாரே? எழுபதாண்டு முடிவதற்குள் எழுச்சிமிக்க எண்பதுக்கு மேற்பட்ட இலக்கியங்கள் உழுபடைபோல் ஒன்றின்பின் ஒன்ருய் யாத்து உள்ளத்தில் உணர்ச்சியென்னுங் கனலைமுட்டி விழிப்படையச் செய்துதமிழ் இனத்தின் மானம் வீறுகொள்ளும் படிமுயன்று இடையருது வழிவகுத்த வெள்ளிவிழாச் செங்கோல்தன்னை வாழியபல் லாண்டுவென வாழ்த்துகின்றேன். தமிழினத்தின் கேடயமாய்த் திகழும்செங்கோல்! சன்மார்க்க நெறிபரப்பித் தழைக்கும் செங்கோல் இமயம்நிகர் எதிர்ப்பையெல்லாம் வெல்லும் செங்கோல்' இனமானம் காத்தோம்பும் இனியசெங்கோல்! தமிழகத்தின் எல்லைகளை மீட்ட செங்கோல்! தலைநகரைத் தமிழினத்திற் களித்தசெங்கோல்! சமயமத பேதமெல்லாம் தகர்க்கும் செங்கோல், சகத்தினில்பல் லாண்டுயர்ந்து வாழ்கசெங்கோல்! "செங்கோல் வெள்வி விழா 28-3-76 306

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/315&oldid=807740" இலிருந்து மீள்விக்கப்பட்டது