பக்கம்:பருவ மழை.pdf/317

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அன்பு மலர் இன்பத் திருவுருவே இந்திரா இதயத் தொளிர்மணியே மின்பூத்தபெண்ணரசே! இந்திரா வெற்றித் திருமகளே தத்தித் தவழ்ந்தெழுந்து இந்திரா தாவி கடைபயின்றே! சித்தங்கவர்கிளியே! இந்திரா செல்வத்திரு மகளே! மழலைமொழிகளெலலாம் சிறுமலர்வாயினிற் கேட்ட . பின்னே குழல் ஒலி தோற்றதடி குயிலும் கூவாது கின்றதடி! காலைக் கதிர் எழுங்கால், இருட்பனிக் கங்குல் அகல் . வதைப்போல் வேலைத் துயரமெல்லாம் நின திரு வேல்விழி மாற்றுதடி! சோலைப் பசுங்கிளியே, இந்திரா சுந்தர மாமயிலே! சேலைப் பழித்த விழி, இந்திரா சிந்தையை யள்ளுதடி! மேனிசிலிர்க்குதடி இந்திரா மெல்லுடல் திண்டிடுங்கால் தேனில் இனியதடி இந்திரா கின் தெள்ளமுதக் கனிவாய் பெண்ணின் பெருமைகளை உலகில் பேசிமுழக்க வந்த வண்ணப் புதுமலரே இந்திரா! வாழ்வின் இன்பச்சுடரே! கலையின் இனிமையெல்லாம், இந்திரா கின்கருவிழி காட்டுதடி மலையின் மணிவிளக்காய், இந்திரா வையத்தில் வாழ் வாயடி! திரைப்பட இயக்குநர் திரு. ப. நீலகண்டன் அவர்களில் செல்வியின் (26.9.43) முதல் ஆண்டு நிறைவின்போது வழங்கிய வாழ்த்து. 308

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/317&oldid=807742" இலிருந்து மீள்விக்கப்பட்டது