பக்கம்:பருவ மழை.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எப்போதோ செய்தவினை என்றும் கூறி ஏமாற்றும் கொடியவர்சொல் எல்லாம் நம்பும் அப்பாவித் தமிழன் இன்று யாரு மில்லை, அநியாயம் செய்திடுவோர் வாழ்ந்த தில்லை! ஆயிரத்திற்(கு) இருபதுபேர் பிழைப்புக் காக அன்னை தமிழ்ச் சிறப்பழிக்கத் துணிகின் ஹீரோ: வாயிருந்தும், ஊமையராய்ச் செவிடாய் மண்ணில் மறத்தமிழர் தமைவைக்கத் துடிக்கின் ஹீரோ காயினம்தான் தன்னினத்தை எதிர்த்துச் சாடும், கற்றமிழர் வாழ்விலுமா இந்தக் கேடு? போயொழிந்த வெள்ளையனின் நாட்டிற் கேரீர் போய்விடுவீர்! பொல்லாங்கைப் பொறுக் கமாட்டோம்! வெள்ளையன்தன் ஆட்சிக்கே ஏவல் செய்ய விதைத்துவிட்ட ஆங்கிலத்தைக் கருவி யாக்கிக் கொள்ளேயிட்டோர், விடுதலைக்குப் பின்னும் அந்தக் கொடுமைமிகும் அநீதியினை நீதி யாக்கிக் கொள்ளிவைக்கத் துணிந்துவிட்டீர்! தமிழர் உள்ளக் குமுறலெல்லாம் ஆவேசக் கனலாய் மாறித் துள்ளியெழத் துணிந்துவிட்டால், புல்லர் கூட்டம் துாள்து.ாளாய் கொறுங்கிவிடும், எச்சரிக்கை! ஆட்சிமொழி பயிற்சிமொழி ஆகா விட்டால் அன்னைமொழி உயர்ந்திடுவ தெந்தக் காலம்: மீட்சியற்ற பாமரர்கள் கல்வி கேள்வி விளக்கமுற்றுத் தலையெடுப்ப தெந்தக் காலம்: 17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/34&oldid=807750" இலிருந்து மீள்விக்கப்பட்டது