பக்கம்:பருவ மழை.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூழ்ச்சியினுல் சொர்க்கமென்றும் நரக மென்றும் சுரண்டலுக்கு வழிவகுத்த தந்தக் காலம்! வீழ்ச்சியுற்ற சமுதாயத் தடைத கர்த்து விழித்தெழுந்து புரட்சிசெய்வ திந்தக் காலம்! தமிழரென்ற இனஉணர்ச்சி இல்லா தோரும் தமிழ்மொழியைத் தாய்மொழியாய்க் கொள்ளா தோரும் தமிழ்மொழியின் தனிச்சிறப்பை அறியா தோரும் தமிழ்மொழியின் வளர்ச்சியினைச் சகியா தோரும் தமிழ்ப்பயிற்சி மொழித்திட்டம் நிறைவே ருமல் தடுத்துவிடப் பார்க்கின்ருர்! திட்டம் வென்ருல், தமிழகமே சமதர்மப் பூக்கா டாகும்! சாதிவெறிக் கொடுமையெல்லாம் தகர்ந்தே போகும்! அறிவனைத்தும் அழிந்துவிடும் ஆங்கி லத்தை அகற்றிவிட்டால், என்பதெல்லாம் அவலப் பேச்சு, மறுமலர்ச்சி யுகம்படைத்துக் காட்டும் ஜப்பான், மதிக்கோளில் ரதம்செலுத்தும் ருஷ்யா, மற்றும் சிறியபிற நாடுகளும், சீனு, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஐரீஷ், தேச மெல்லாம் அறிவுபெற்ற(து) ஆங்கிலத்தின் துணையால் தானு? ஆகாத வாதம்இதை யாரே ஏற்பார்? பத்திரிகை பலத்தாலும் பணத்தி லுைம் பாரதத்தைத் தமிழகத்தை என்றென் றைக்கும் வெற்றிகொள்ள முடியுமெனக் கனவு காணும் வீணர்களின் எண்ணத்தில் மண்ணைத் தூவ 18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/35&oldid=807751" இலிருந்து மீள்விக்கப்பட்டது