பக்கம்:பருவ மழை.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

படித்தவர்க்கும் பாமரர்க்கும் ஏற்றத் தாழ்வு பணக்காரன் ஏழையென்னும் ஏற்றத் தாழ்வு! தடித்துவிட்ட ஜாதிமத பேத மென்னும் சங்கடத்தால் விளைகின்ற ஏற்றத் தாழ்வு! கிடைத்துவிட்ட வாய்ப்பாலே உயர்ந்து விட்டோர் கீழோராய் மற்றவரை யெண்ணும் போக்கு பொடிப்பொடியாய் போகஇளந் தமிழா இன்றே பொங்கியெழு புன்மையெலாம் பொசுங்கிப் போகும்! இலக்கியத்தில் கவிதைகளில் நாடகத்தில் இன்னபிற கலைத்துறையில் பிற்போக் காளர் தலையெடுத்துப் பழமையெலாம் என்றென் றைக்கும் சாசுவத மாய்கிலைக்கத் திருத்தொண் டாற்றும் கொலைக்கருவி தனைஎழுது கோலாய்க் கொண்டு கொக்கரிக்கின் ருர், அவர்தம் கொட்ட மெல்லாம் உலைக்களத்தில் மெழுகெனவே புகைந்து போக உன்னுடைய பணிகாட்டுக் குடனே தேவை! 1.10-12 ல் இளந்தமிழன் ஏட்டில் வெளிவந்தது. 21

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/38&oldid=807754" இலிருந்து மீள்விக்கப்பட்டது