பக்கம்:பருவ மழை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்க் காதலி ASAAASJJSMSMSMSMSMSMMAMJSJSAASAASAASAASAASSAAAAAAS AAASASAAAAASA SAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAASAAAS வந்தனள் எந்தன் செந்தமிழ்க் காதலி சிந்தனை உலகினிலே-ஒரு காள் (வந்தனள்) அந்தரம் வாழும் மடந்தையர் போலே அருள் தவழும் விழிகளோடென் முன்னலே (வந்தனள்) சிந்தாமணி யிழை சிரத்தினி லாட, செவிகளில் குண்டலகேசிக ளாட, செந்தாமரைவாய் திருக்குறள் பாட, செழுந்தளிர்க் கரங்களில் வளையாபதி யாட (வந்தனள்) இந்துவை நிகர்த்திடும் எழில்முகம் காட்டி, இனிய செந்தேன் தமிழ்இசை யமுதுாட்டி, செந்திரு மேனியில் மணிமேகலை பூட்டி, சிலப்பதிகாரம் அணி செல்வச் சீமாட்டி (வந்தனள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/40&oldid=807757" இலிருந்து மீள்விக்கப்பட்டது