பக்கம்:பருவ மழை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பண்டுதொட்டே இசைக்கலையில் தமிழ்நாட்டார்கள் பயிற்சிமிக்கா ரென்பதற்குப் பன்னுரற் ருண்டாய் எண்டிசையும் இசைக்கலையின் ஏற்றம் சாற்றும் இணையில்லா காவியங்கள் கவிதை நூல்கள் உண்டுஇன்னும் கோவில்களாய், மனையாய், குன்ருய், ஒவியமாய், உயிர்உணர்ச்சிச் சிலையாய்க் கண்டும் தண்டமிழின் னிசைக்கலைக்குப் பொருந்தா தென்னும் தகுதியற்ற வாதமின்னும் எழுதல் ஏனே? எண்பது நூற் ருண்டுகட்கு முன்பே இங்கே இசைக்கலையின் நுணுக்க மெல்லாம் இக்காட் டார்கள் கண்டிருந்தா ரென்பதற்குச் சான்ருய்ச் சங்கக் காலமுதல் நேற்றுவரைக் கலைவல் லார்கள் வண்ணமென்றும் சந்தமென்றும் பள்ளு என்றும் வஞ்சிப்பா காட்டுப்பா வரிப்பா வென்றும் எண்ணரிய தமிழிசைகள் இருக்கப் பாடல் இல்லையென்னும் வாதமின்னும் எழுவ தேனே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/42&oldid=807759" இலிருந்து மீள்விக்கப்பட்டது