பக்கம்:பருவ மழை.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெஞ்சம் பதைக்க வில்லையா தமிழ் காட்டின் நிலையை நினைக்கும்போது தமிழாஉன் (நெஞ்சம்) பஞ்சமும் வறுமையும் பகைமையும் நமக்குள் வஞ்சமும் சூழ்ச்சியும் வளர்வதைக் காணஉன் (நெஞ்சம்) வகுப்பொருகோடி வகுத்துவிட்டார் மத வாதப் புராணம் பல தொகுத்து விட்டார் கண்டோர் நகைக்கும் இழி நிலையைப் புகுத்தி விட்டார் தமிழ் நாட்டின் பெருமை யெல்லாம் அழித்து விட்டார் அந்தோ (நெஞ்சம்) விடியுமுன் னெழுந்து மாலைவரை ரத்த வேர்வைசிந்த உழைத்தும் கூலிபோ தாத கொடுமையில்ை தொழிலாளி வருந்தப் பகற் கொள்ளையடித்துச் சிலர் உள்ளம் களிக்கக் கண்டுன் (நெஞ்சம்) 28

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/45&oldid=807763" இலிருந்து மீள்விக்கப்பட்டது