பக்கம்:பருவ மழை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இமயமுதற் குமரிவரை உறவென் ருலும் இனநலத்தைப் பிறர் அழிக்கும் சூழ்ச்சி கண்டால் அமைதியுருேம் அருந்தமிழர் ஆற்றல் காட்டி அமர்விளைப்போம்; இறுதிவெற்றி காமே காண்போம்! தமிழரசுக் கழகத்தின் வீரர் கூட்டம் சக்திமிக்கார் தன்மானம் மிக்கார் முன்பு சமயம்வந்த போதெல்லாம் இதனை இந்தத் தாரணியோர் உணரும்வண்ணம் சாதித் துள்ளோம்! செந்தமிழர் தலைநகரைக் கொள்ளை கொள்ளச் சிந்தைகொண்டு ஆந்திரத்துச் சோதரர்கள் மந்தைமக்தை யாய்த்திரண்டு ஆர்ப்ப ரித்து மருட்கொண்டு கூச்சலிட்டுக் குழப்பம் செய்த அந்தகாள் அதைஎதிர்த்துக் குரல்கொடுக்க யார்துணிந்து முன்வந்தார். இவர்க ளும்தான் இந்தமண்ணில் தமிழரென உலவு கின்ருர்! இவர்களையும் தலைவரென மதிக்கின் ருர்கள்! இந்தியாவில் ஆங்கிலேய ஆதிக் கத்தை எதிர்த்துமுதற் போர்தொடுத்துக் களம்பு குந்தோன் செந்தமிழன் தான்!என்னும் பெருமை மிக்க சிறப்பதனை நமக்களித்த தெவரின் சேவை? 30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/47&oldid=807765" இலிருந்து மீள்விக்கப்பட்டது