பக்கம்:பருவ மழை.pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சந்ததமும் விடுதலைக்கே உழைத்தி ரண்டு ஜன்மசிறைக் கைதியாகிச் செக்கி ழுத்து கொந்துபட்ட வ. உ. சி. பெருமை பேசி நூலாக்கிப் பரப்பியது எவர் உழைப்பு? எல்லைப்போர் கிளர்ச்சியிலே நமது வீர இளைஞர்பெரும் படைதிரண்டு எழுச்சி கொண்டு சொல்லவொண்ணு இன்னலுற்று மீட்டுத் தந்த சோகமிகும் வரலாற்றை மறந்தா போனுேம்? செல்லையா வொடுதேவ சகாயம் மற்றும் திருவாலங் காட்டுக்கோ விந்த சாமி, வல்லவனும் பழனிதந்த மாணிக் கம்போல் மாமணிகள் உயிர்பலிதந் தெல்லை மீட்டோம்! அன்னைமொழி ஆட்சிமொழி ஆவ தற்கு அயராது பாடுபட்டோம், வெற்றி கண்டோம்! சென்னை' யெனும் அவமானப் பெயரை நீக்கிச் செந்தமிழ்கா டெனும்பெயரைச் சூட்டி வைத்தோம்! பின்னர்வந்த தெகூடினப்ர தேச மென்னும் பெரும்பூதம் தனைவிழ்த்தி வெற்றி கண்டோம்! இன்னுமிந்த ஆங்கிலத்தின் அடிமைக் கூட்டம் எத்தனைநாள் எதிர்த்துகிற்கும்? அதையும் பார்ப்போம்! புறவினத்தார் மத்தியிலே போரி டுங்கால் புரியாம லோபுரிந்தோ ஒதுங்கி நிற்கும் துறவுமனப் பான்மைகொண்டோர் தொலைந்தி டட்டும்! துளியளவும் தன்மான மில்லாப் பல்லோர் 31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/48&oldid=807766" இலிருந்து மீள்விக்கப்பட்டது