பக்கம்:பருவ மழை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புறமுதுகில் தாக்குவதே பெருமை யென்று புன்முறுவல் செய்கின்ருர் இவர்கள் எண்ணம் சிறிதளவும் நிறைவேறப் போவதில்லை; தெய்வத்தின் மீதாணே, நமக்கே வெற்றி! நூற்றுக்குத் தொண்ணுாற்றி எழுவ ரெண்மர் நுண்ணறிவு பெறுவதற்குத் தடையாய் கின்று நேற்றுவரைத் தீங்கிழைத்த ஆங்கி லத்தை நிலைநிறுத்தத் துடிதுடிக்கும் இரக்க மற்றக் கூற்றுவர்தம் கொடுஞ்செயலை சமுதாயத்தின் கொலைகாரப் பாவிகளின் தீமை தன்னைத் துாற்றுவதும், அன்னவர்தம் ஆண வத்தைத் தொலைத்தழித்து முடிப்பதும்தான் நமது வேலை! "இந்தியா? ஆங்கிலமா?’ என்று சர்ச்சை இடுகின்றேர் என்றென்றும் தாய்மொ ழிக்கு எந்தஇட மும்கிடைக்கக் கூடா தென்றே எண்ணுகின்ருர்; இனப்பற்றுச் சொரணையற்ற மந்திரியும் இதற்கேற்பத் தாளம் போட்டு மறைமுகமாய்த் தாய்மொழிக்குத் துரோகம் செய்ய முந்துகின்ருர்! தமிழ்மக்கள் உணர்ச்சி கொண்டு முனைந்துவிட்டால் முடிந்துவிடும் மொழி யாதிக்கம்! சாமான்ய மக்களெல்லாம் படித்து விட்டுச் சரிசமமாய் உத்யோகப் போட்டி யிட்டால் காமந்தப் போட்டியிலே சரிந்து போவோம்; நலிந்துவிடும் நம்வாழ்வு என நினைக்கும் 32

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/49&oldid=807767" இலிருந்து மீள்விக்கப்பட்டது