பக்கம்:பருவ மழை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாண்புமிகு மேலவைத் தலைவர் சிலம்புச் செல்வர் ம. பொ. சிவஞானம் 'பருவ மழை என்னும் தலைப்பில் வெளிவரும் இக் கவிதை நூலின் ஆசிரியர் கவிஞர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள், எனது தலைமையில் இயங்கிவரும் தமிழரசு இயக்கத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். அந்த இயக்கத்தின் தனிப்பெருங் கவிஞராகவும் விளங்கி என்னை விட்டு நீங்காது நிழல்போல இருந்து வருகிருர், இவருடைய கவித்துவத்தில் மயங்கி 30 ஆண்டுகளுக்கு முன்பு இவரை என்னுடைய நண்பராக ஏற்றுக் கொண் டேன். அந்தக் கவிதைக் காதல் இன்றளவும் இருந்து வருகிறது. இந்நூலில் உள்ள கவிதைகளில் பல எனது “செங் கோல்” வார இதழில் முன்னரே வெளிவந்தவையாகும். எல்லாக் கவிதைகளுமே இனிப்பவை! விறகு வெட்டி’ என்னும் தலைப்பிலுள்ள கவிதையிலே தமது உணர்ச்சியைக் கொட்டியுள்ளார். 'கொட்டுகின்ற குளிர் மழையும் பனியும் காற்றும் கொடுவெயிலுங் கருதாது உழைத்த லுத்துப் பட்டினியால் வயிருெடுங்கி ஒட்டிப் போன பாட்டாளி உழைப்பில் வரும் பயனை யெல்லாம் எட்டுணையும் கருணையின்றித் தின்ற ழித்து ஏப்பமிட்டு இறுமாந்து இருக்கு மிந்த பட்டவெறும் கட்டையெனும் உணர்ச்சி.யற்ற பணக்காரன் உள்ளமிதை உணர்வ தென்ருே'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/5&oldid=807768" இலிருந்து மீள்விக்கப்பட்டது