பக்கம்:பருவ மழை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெய்வர் தமதறிவின் பெற்றியினைப் போற்றுகின்றேன்! காத்திகம் பேசியிந்த நாட்டின் நெறியழிக்கும் பேய்த்தனத்தைச் சாடுகின்ற பெரியோரைப் போற்றுகின்றேன்! திருவாசக மென்னும் தெள்ளமுதைப் பொழிகின்ற அருளாளர்,தங்கள்;அடியிணைகள் போற்றுகின்றேன்! முவா மருந்தன்ன முன்னேர் கமக்களித்த தேவாரப் பண்ணிசைப்போர் திருவடியைப் போற்றுகின்றேன்! சேக்கிழார் தந்த திருத்தொண்டர் வாழ்வனைத்தும் வாக்கினுல் கூறிடுவோர் மலரடியைப் போற்றுகின்றேன்! கம்பன் புகழ்பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் அன்பர் திருவடிக்கும் அஞ்சலிகள் செய்கின்றேன்! இருள்சேர் இருவினையும் எய்தாமல் இவ்வுலகோர்க் கருள்சேர்க்கும் நல்லொளியாய்,அறிவின் திருவிளக்காய் மருள் நீங்கி மாந்தரெல்லாம் வாழும் வகையுரைக்கும் குறள்சேர் கெறிவளர்க்கும் குழுவையும்கான் போற்று கின்றேன்! சங்க நூல் எத்தனையோ சார்புநூல் எத்தனையோ! பொங்கும் புதுமைகலம் புகலும் தமிழ் நூல்கள் எத்தனை எத்தனையோ, இன்பநூல் அத்தனையும் சித்தம் களித்துவந்து சிரமேற்று வாழவைக்கும் வித்தகரே. ஆயகலை விற்பனரே! நீங்கள் கண்ட அத்தனை யிலும்சிறந்த அரியவிழா இந்தவிழா! ஏனென்று கேட்டால் எளியேனென் சிற்றறிவுக் கானவரை ஆய்ந்து சொல்வேன் அறிஞர்களே கேட்டருள்வீர்! கற்றவரே! சற்றேனும் காய்தல் உவத்தலின்றி முற்றும்செவி மடுத்தென் முறைகேட்க வேண்டுகிறேன் 37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/54&oldid=807773" இலிருந்து மீள்விக்கப்பட்டது