பக்கம்:பருவ மழை.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குற்றங் குணமிருந்தால் குணத்தையே கைக்கொண்டு குற்றத்தை நீக்கிக் குழந்தையென ஆட்கொள்வீர்! என்னுந் துணிவோடு இங்கோர் சிலகருத்தும் சன்னதிக்குக் காணிக்கை தயவுடனே ஏற்றிடுவீர்! தொல்காப்பியம் முதலாய் தொடர்காப்பி யங்களெனப் பல்காப்பி யங்களேநாம் பயின்ருேம், பயனடைந்தோம்! பக்திச் சுவையூட்டிப் பரமனருள் கூட்டித் தித்திக்கும் ஞானச் சிகரத்தில் ஏற்றி வைக்கும் சித்தத்தின் மாசகற்றிச் சிறுமைப் பிறப்பறுத்துச் சுத்தசுயம்புவென்னும் ஜோதியினைக் காட்டுவிக்கும் சாத்திரங்கள் எத்தனையோ! சன்மார்க்கப் போதனைசொல் சூத்திரங்கள் எத்தனையோ துதிப்பாடல் எத்தனையோ! கன்னற் சுவையமுதக் காதற்கலை வளர்க்கும் உன்னதாற் காவியங்கள் உயிர்த்தமிழில் எத்தனையோ! ஐம்பெருங் காப்பியங்கள் அகமுடன் புறநூற்கள்! கமபனின் ராமகாதை காதலும் தூதும்இன்னும் வில்லியின் பாரதமும் வியத்தகு நைடதமும்! நல்லியல் களவெண்பா கானிலம்புகழ்க் கோவையும்! சொல்லினிக்கும் சந்தச்சுவை திருப்புகழ்சேர்ப் பண்ணும்! மெல்லிசைச் சிந்துப்பண்ணும் மேன்மைசேர் சித்தர் பாட்டும்! தரணியே புகழும்வீரத் தமிழ்வேந்தன் கலிங்கப்போர் பரணியும் பத்துப்பாட்டும் பதினெண் கீழ்கணக்கும்! பின்னும் கல்லாடம் கற்றுத்தேர்ந்த கலைவாணர் முன்னேகின்று சொல்லாடக் கூடாதென்னும் சொல்லேநூற் பெருமை சாற்றும்! 38

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/55&oldid=807774" இலிருந்து மீள்விக்கப்பட்டது