பக்கம்:பருவ மழை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உலகத்தின் ஒளியிரண்டாம் ஒன்று விண்கதி ரோன், மாகதா நிலைபெற்றுவாழும்நீதி நிகழ்த்திடும்குறள் மற்ருென்ரும்! கல்தோன்றி மண்தோன்ருக் காலத்தின் கணக்குச் சொல்வார்! முன்தோன்றி உலகில்வாழ்ந்த முத்தகுடி தமிழரென்பார்! என்றைக்குப் பிறந்தாளென்று எவருமிங் கறுதியிட்டு மன்றத்துட் சொல்வாரில்லை! வண்டமிழ்மொழித் தாய் ஆயுள்: காலம் பல்லாயிரம் கடந்திட்டா ளெனினும் கன்னிக் கோலத்தின் எழில்குலுங்கக் குறுநகை பூக்கும்என்தாய்! திருவருட் கருணையாலே செந்தமிழ்க் கருவூலங்கள் ஒருபெரும்மா மலைபோல் உலகிடைக் குவிந்ததம்மா! காலத்தால், கடலின் கோளால், கரையானுக் கிரையாயிந்த ஞாலத்தில் அழிந்தநூல்கள் நலனெல்லாம் உணர்க் தோர் யாரே? சென்றவை போக இங்கே சிந்திய மணிகளென்ன இன்று நம் கண்முன்காணும் இலக்கியச் செல்வமேகம் சிந்தனைப் பயிர்க்கு வானம் சிந்திடும் மழையாமென்ருல் செந்தமிழ்த்தாய் தன்ஆற்றல் திறனெலாம் உரைப் பார் யாரே? அந்தநல் இலக்கியத்துள் ஆங்காங்கே ஒன்றிரண்டு செந்தமிழ் மன்னர்வீரச் சிறப்புகள் சிலதைக் கூறும்! ஆயினும்; தமிழகத்தின் அரசியல்வர லாற்றுண்மை யாவையும் எடுத்துக்கூறும், அற்புதமுதல் நூல்இங்கே இளங்கோவன் இயற்றித்தந்த இணையற்ற சிலம்பே என்றுக் களங்கமில் புலவர்யாரும் கழறுவர் ஐயமில்லே! 39

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/56&oldid=807775" இலிருந்து மீள்விக்கப்பட்டது