பக்கம்:பருவ மழை.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தகு மேதையாத்த அற்புத நூலிற்கண்ட முத்தமிழ் மண்டிலங்கள் மூன்றினுள் இதுவே மேலாம்! என்பதை எடுத்துக்காட்டி இயற்றமிழ் பாடுதற்கு ஒன்பது கவிஞரிங்கே உவப்புடன் வந்துள்ளார்கள்! வந்துள்ள கவிஞரெல்லாம் வகையுடன் கலைபயின்று செந்தமிழ் விருதுபெற்ற சிறப்பினரா குங்கண்டீர்! தலைமையேற் றிருக்கும்.நானே தகைமைசேர் விருது கல்கும் கலைக்கூடம் எதிலும்என்றும் கால்வைத்த தில்லை! உண்மை! ஆலுைம் விருதுகல்கும் அறிஞரும் மருட்சிகொள்ளத் தேனுறும் இலக்கியத்தின் செந்தமிழ்மழை யாய்ப் பெய்யும் தவஞானம் பெற்ருேரென்று தமிழ்ஞானம் பெற்ருேர் கூறும்! சிவஞானச் செம்மலின்தாள் சிரமேற்ற மாணவன் ѣпбóт! தமிழினமானம் காக்கும் தமிழர்தம் கழகமேகான் அமைவுறக் கல்விகற்ற அழகுசேர்க் கலையின்கூடம் ஆதலால் தலைமையேற்கும் ஆற்றலை எனக் களித்த மேதையின் பாதம் போற்றி வினையினைத் தொடங்குகின்றேன்! 30-1-61 ஞாயிறன்று காரைக்குடியில் நடைபெற்ற இளங்கோ விழாவில், நிகழ்த்திய கவியரங்கத் தலைமையுரை. 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/57&oldid=807776" இலிருந்து மீள்விக்கப்பட்டது