பக்கம்:பருவ மழை.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்தசுதந் திரம்மக்கள் வாழ்வுக் கான வழிகாட்டும் எனநினைத்தோம், கனவாய்ப் போச்சு! இந்தநிலை தனமாற்றி எல்லோ ருக்கும் ஏற்றத்தாழ் வில்லாத வாழ்வு காண அந்தந்த இனமும்மொழி வாரி யாக அனைத்துடைமைப் பொதுவாட்சி அமைப்போம்; பின்பு சுந்தரம்சேர்க் குமரிதொட்டே இமயம் மட்டும் தோழமையால் நடுவாட்சி ஒன்றைக் காண்போம்! யாருமிதை அநீதியெனச் சொல்வதற்கு அணுவளவும் நியாயமில்லை, ஆய்ந்து பாரீர்! ஊருக்கு நூறுகட்சி உண்டு பண்ணி ஒற்றுமையைக் குலைக்காதீர்; அன்பு வாழ்வைப் பாருக்குப் பறைசாற்றித் தமிழினத்தின் பண்பு, மொழி, நாட்டுரிமைத் தன்னைக் காக்கப் போருக்குத் திரண்டெழுந்து,புரட்சி செய்து பொதுவுடைமைப் புதுவாழ்வைச் சமைப்போம் வாரீர்! 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/59&oldid=807778" இலிருந்து மீள்விக்கப்பட்டது