பக்கம்:பருவ மழை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

iv என்ற கவிதையிலே தொழிலாளி வர்க்கத்தினர் பட்டு வரும் தொல்லைகளைப் படம் பிடித்துக் காட்டிக் கவிஞர் சோஷலிசத்தில் தமக்குள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்து கிருர், தமிழகத்திலே தாம் தொடர்பு கொண்டிருந்த கவிஞர் களும், கலைஞர்களும், தலைவர்களும் மறைந்தபோதெல்லாம் பிரிவாற்ருமை சாரணமாக அவர்கள்மீது தாம் புனேந்த கவிதைகளையெல்லாம் இந்நூலில் தந்துள்ளார். பல்வேறு கவியரங்குகளில் தாம் அரங்கேற்றிய கவிதை களையும் இந்நூலில் இணைத்துள்ளார். தம்முடைய மைந்தன் அசோகன், மணவறை புகவிருந்த நேரத்திலே, ஒரு விபத்தில் சிக்கி, மாண்டதைக் குறித்து கவிஞர் புனைந்துள்ள இரங்கற் பாக்கள் நம் இதயத்தைத் தொடுகின்றன. நாடக உலகின் சக்கர வர்த்தி அவ்வை தி. க. சண்முகம் இறந்தபோது, இவர் தம் கண்ணிரால் வரைந்த கவிதைகளை இந்நூலில் பார்த்து, படித்து மீண்டும் ஒரு முறை நானும் கண்ணிர் விட்டேன். நண்பர் கு. சா. கிருஷ்ணமூர்த்தி இயற்கைக் கவிஞர்; இவர் புனைந்த 'பெருமை கொள்வாய் தமிழா!" என்ற பாடலை டி. கே. எஸ். குழுவினரின் ஒளவையார் நாடகத்தில் பாரி வள்ளலின் மகளிர் இருவரும் பாடும் கட்டத்தில் உணர்ச்சி வயப்பட்டு உயர்ந்த குரல் எழுப்பி-ஒளவையாரும் (டி. கே. சண்முகமும்) சேர்ந்து பாடும்போது கேட்போரின் உள்ள மெல்லாம் புல்லரிக்க மகிழ்ச்சி ஆரவாரம் செய்வதைக் கண்டு நானும் பலமுறை மகிழ்ந்திருக்கிறேன். தமிழிசை இயக்கம் உரம் பெற்றிருந்த அந்நாளில், இவரது தமிழ் உணர்ச்சி மிக்க பாடல்களை இசையரசு. தண்டபாணி தேசிகர், கே. பி. சுந்தராம்பாள் அம்மையார், மதுரை சோமு, சிதம்பரம் ஜெயராமன் ஆகிய இசைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பருவ_மழை.pdf/6&oldid=807779" இலிருந்து மீள்விக்கப்பட்டது